Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்.. தலைதீபாவளிக்குச் சென்ற புதுமாப்பிள்ளை கடத்தி கொலை..

Gowthami Subramani October 26, 2022 & 12:25 [IST]
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்.. தலைதீபாவளிக்குச் சென்ற புதுமாப்பிள்ளை கடத்தி கொலை..Representative Image.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நான்கே மாதத்தில், தலைதீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளையை கூலிப்படையைச் சேந்த 10 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் உள்ள ஐயனேரி பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடுவதற்கான இசை குழு நடத்தி வந்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் அருகே உள்ள ஆயலாம்பேட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் சோளிங்கர் அரசு பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்துள்ளார்.

அப்போது பேருந்தில் சென்ற மாணவிக்கும், சரத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. தற்போது மாணவிக்கு 19 வயதான நிலையில் இவர்களது காதலை அறிந்த பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, சரத்குமாரின் பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் ஏர்றுக்கொண்டு சரத்குமாரின் வீட்டில் இருவரும் வசிக்கத் தொடங்கினர்.

அந்தப் பெண்ணின் பெற்றோரும் ஒரே மகள் என்பதால், அவர்களை தலைதீபாவளிக்காக தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர். இதனால், சரத்குமார், மனைவியுடன் மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தலைதீபாவளிக் கொண்டாடி விட்டு, இரவு சரத்குமார் அவரது மாமனாருடன் சேர்ந்து பைக்கில் பெட்ரோல் போட வீட்டில் இருந்து சென்றுள்ளனர். அப்போது, சோளிங்கர் அடுத்துள்ள ஐப்பேடு பஸ்நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இரவு 7 மணியளவில் பெட்ரோல் போட முயன்றனர். அப்போது கையில் ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென சரத்குமாரைத் தாக்கியுள்ளது. இதனைத் தடுத்த அவரது மாமனார் உமாபதிக்கும் அடி, உதை விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. இதுபற்றி, உமாபதி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் சுமார் 2.கி.மீ தூரத்தில் மறைவான பகுதியில் வைத்து சரமாரியாகத் தாக்கி விட்டு தப்பியுள்ளனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் இருந்த சரத்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று சரத்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை