Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி..!

madhankumar July 08, 2022 & 14:29 [IST]
நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி..!Representative Image.

உடல்நல குறைவால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்று படமான "பொன்னியின் செல்வன்" படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இவரின் முதல்பார்வை மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில், இன்று மாலை (ஜூலை 8) இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்னமாதிரியான பிரச்னை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்