Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவனும்-பார்வதியும் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லீனா மணிமேகலை..!

madhankumar July 07, 2022 & 11:23 [IST]
சிவனும்-பார்வதியும் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லீனா மணிமேகலை..!Representative Image.

சிவன் மற்றும் பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று புகை பிடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இது வேறு எங்கோ எடுக்கப்பட்டது என கேப்சன் வைத்துள்ளார் இயக்குனர் லீனா மணிமேகலை.

கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை என்பவர், சமூபத்தில் "காளி" என்ற ஆவணப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தார், அதில் இந்து கடவுளான காளி கையில் சிகரெட்டுடன் மற்றொரு கையில் ஒருநா சேர்க்கையாளர்களின் LGBT கோடியை பிடித்திருப்பது போன்று அமைந்திருந்தது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் அவரை கைது செய்யவேண்டும் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதுதவிர அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் அந்த புகை படத்தை நீக்கியது, மேலும் டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்த ஆவணப்படத்தை திரையிடமாட்டோம் என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் லீனா மணிமேகலை மற்றொரு சர்சைக்குரிய படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர் ஜோடியாக நின்று சிகரெட் புகைப்பது போல் டுவிட்டரில் பகிர்ந்து இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். காளி போஸ்டருக்கே கொதித்தெழுந்த நெட்டிசன்கள், தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த பின் அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்