Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாட்ஸ் அப், கூகுள் டியோ, சூம் ஆப்களுக்கு இனிமே இது கட்டாயம்.. ஒன்றிய அரசின் அதிரடி முடிவு…!

Gowthami Subramani September 23, 2022 & 14:00 [IST]
வாட்ஸ் அப், கூகுள் டியோ, சூம் ஆப்களுக்கு இனிமே இது கட்டாயம்.. ஒன்றிய அரசின் அதிரடி முடிவு…!Representative Image.

இணையவழி மூலமாக தொலைபேசி சேவை வழங்கும் அப்ளிகேஷன்களான சூம், கூகுள் டியோ, வாட்ஸ் அப் உள்ளிட்டவை இந்தியாவில் இயங்குவதற்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிய தொலைத்தொடர்பு 2022 மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவில், தொலைத் தொடர்பு சேவையில் OTT சேவை இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இணையம் வழியாக அழைப்பு மற்றும் செய்தி அனுப்பும் சேவைகளை வழங்கி வரும் ஓடிடி நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

அதன் படி, தற்போது அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்ட அப்ளிகேஷன்கள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், வாட்ஸ் அப், சூம், கூகுள் டியோ உள்ளிட்ட அப்ளிகேஷன்கள் அடங்கும். இணைய சேவை நிறுவனங்களோ, தொலைத் தொடர்பு நிறுவனங்களோ உரிமம் ஒப்படைத்தால், அவற்றிற்கு கட்ட்டணம் திருப்பித் தரப்படும். மேலும், நிறுவனங்களுக்கு நுழைவுக் கட்டணம், உரிம கட்டணம், அபராதம், கூடுதல் கட்டணம் போன்றவற்றிற்கு முழுமையாகவோ அல்லது பகுதி அளவுக்கோ தள்ளுபடி செய்ய மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்