Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அத்தனையும் நடிப்பா கோப்பால்.. காலில் விழும் மாணவி.. அண்ணாமலையின் வைரல் வீடியோ!!

Sekar September 11, 2022 & 11:41 [IST]
அத்தனையும் நடிப்பா கோப்பால்.. காலில் விழும் மாணவி.. அண்ணாமலையின் வைரல் வீடியோ!!Representative Image.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவி அவர் காலில் விழுவதும், அவர் அதை தடுத்து காலில் விழக்கூடாது என அட்வைஸ் செய்வதும் வைரலான நிலையில், இது ஏற்கனவே ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டதா எனக் கேட்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு தற்கொலைக்கு திமுக தான் முழு காரணம் என விமர்சித்ததோடு, உதயநிதி, கனிமொழியையும் விமர்சித்திருந்தார்.

அப்போது நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவி, தனக்கு டாக்டர் சீட் கிடைக்குமா என்று எண்ணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த நிலையில், மருத்துவம் படிப்பதற்கான அந்த மாணவியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த மாணவியும் பின்னர் அண்ணாமலை தனக்கு உதவியது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேட்டி அளித்திருந்தார். மேலும் நீட் தேர்வு சுலபமானது தான் என்றும் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்றும் ஊக்கமளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

அண்ணாமலை செய்த உதவி பலரிடமும் பாராட்டைப் பெற்ற நிலையில், அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியிடம், அண்ணாமலை காலில் விழுமாறு கண்களால் சிக்னல் கொடுக்க, மாணவியும் உடனே அண்ணாமலையின் காலில் விழ, உடனே காலில் விழ வேண்டாம் என்று அண்ணாமலை அந்த மாணவிக்கு அட்வைஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  

Here is Tamilnadu BJP president @annamalai_k & team forcing a medical aspirant to bow down to @annamalai_k foot for medical seat. These low life fellows have given hope that TN BJP president can get a seat for her. #ShameOnYouAnnamalai pic.twitter.com/rbza5oAAxm

— Omar Moktar (@lionofdesert_) September 10, 2022

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "அத்தனையும் நடிப்பா கோப்பால், எல்லாமே ஸ்கிரிப்ட் தானா" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்