Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யூடியூபர் டிடிஎஃப் வாசனால் போலீசுக்கு வந்த தலைவலி; பலியாடான ரசிகர்கள் பட்டாளம்! 

KANIMOZHI Updated:
யூடியூபர் டிடிஎஃப் வாசனால் போலீசுக்கு வந்த தலைவலி; பலியாடான ரசிகர்கள் பட்டாளம்! Representative Image.

கடலூரில் அலுவலகம் ஒன்றிணை திறந்து வைப்பதற்காக வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் காரில் வந்து இறங்கிய டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்தத்துடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் உடன் வந்தவர்களை வாகனங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. போலீசார் உடனே வந்தவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் ஓடினர் இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டபோது அவரை வழியனுப்புவதற்கு மீண்டும் இரண்டு சக்கர வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர். 

அப்பொழுது அண்ணா மேம்பாலம் அருகே வரும்பொழுது சாலையில் சென்றவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தாக்குதல் தடியடி நடத்தப்படும் என எச்சரித்ததோடு, டிடிஎஃப் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்