Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வடிவேலு பட பாணியில்... காஸ்ட்லி பைக்கை ஆட்டையைப் போட்ட பலே திருடனுக்கு வலைவீச்சு! 

kanimozhi Updated:
வடிவேலு பட பாணியில்... காஸ்ட்லி பைக்கை ஆட்டையைப் போட்ட பலே திருடனுக்கு வலைவீச்சு! Representative Image.

13 லட்ச ரூபாய் மதிப்பிலான உயரக பைக் ஓட்டி பார்த்து தருவதாக கூறிவிட்டு திருடி சென்ற பலே திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

சென்னை அண்ணா நகர் ஹெச் பிளாக் 2வது தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் சுல்பி கராலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கவாஸாகி நிஞ்சா என்ற உயரக இருசக்கர வாகனத்தை சுமார் 13 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். கடந்த ஐந்து வருடமாக இந்த பைக்கை பயன்படுத்திய சுல்பி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாக தன்னுடைய விலை உயர்ந்த கவாஸாகி நிஞ்ஜா பைக்கை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்பதாக இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இதனை பார்த்து சுல்பியை தொடர்பு கொண்ட ஒரு நபர் பைக் வாங்க விரும்புவதாகவும் அதற்கான ஆவணங்கள் குறித்தும் கேட்டிருக்கிறார். நேற்று மதியம் தொழிலதிபரின் வீட்டிற்கு அவர் இல்லாத போது வந்திருக்கிறார்.

பைக் ஓட்டி பார்க்க வேண்டும் என தொழில் அதிபரின் வீட்டிலிருந்த வேலை ஆட்களிடம் கேட்டபோது, உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு தொழில் அதிபர் ஓட்டி பார்ப்பதற்கான அனுமதி கிடையாது, வேண்டுமென்றால் பைக்கை வீட்டின் முன்பாக உள்ள சாலை இறக்கி இயக்கி பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். இதன் பின்பாக வீட்டில் இருந்து சாலையில் இறக்கிய அடுத்த நொடியே பைக்குடன் மாயமாகி உள்ளார். அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்த சிசிடிவி காட்சிகளுடன் தொழிலதிபர் சுல்பி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருடப்பட்ட தன்னுடைய பைக் குறித்த விபரங்களை அளிப்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்