Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு வதந்தியை நம்பி.. பெட்ரோல் பங்கில் குவிந்த மக்கள்.. நள்ளிரவில் நடந்து கூத்து!!

Sekar June 12, 2022 & 12:11 [IST]
ஒரு வதந்தியை நம்பி.. பெட்ரோல் பங்கில் குவிந்த மக்கள்.. நள்ளிரவில் நடந்து கூத்து!!Representative Image.

பெட்ரோல் தட்டுப்பாடு என்ற வதந்தியை நம்பி பெட்ரோல் பம்புகளைச் சுற்றி நீண்ட வரிசையில் மக்கள் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் அகமதாபாத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது.

பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் அகமதாபாத் நகரின் பெரும்பாலான பெட்ரோல் பம்புகளில் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காணப்பட்டன. 

சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும் மற்றொரு வதந்தி பரவியது.

எந்த ஒரு பங்கையும் மூடப் போவதில்லை என்று பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் பலமுறை விளக்க முயற்சி செய்தும் நள்ளிரவுக்குப் பிறகும் மக்கள் பங்குகளில் குவிந்தனர். சில மணிநேரங்களில் நிலைமை மோசமாகி பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் ஸ்டாக் இல்லாமல் மூட வேண்டியதாயிற்று. 

அகமதாபாத்தில் வழக்கமாக பெட்ரோல் பங்குகள் இரவு 11 மணிக்கு மேல் ஆள் அரவமற்ற நிலையில் இருக்கும் சூழலில் இந்த திடீர் வந்ததியால் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பலமணி நேரம் பரபரப்பு நிலவியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை