Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இஸ்லாத்துக்கு எதிரானது.. முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனம்!!

Sekar June 29, 2022 & 13:08 [IST]
இஸ்லாத்துக்கு எதிரானது.. முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனம்!!Representative Image.

அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலையை கண்டித்துள்ளது. சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது மற்றும் இஸ்லாத்திற்கு எதிரானது என்று அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏஐஎம்பிஎல்பியின் பொதுச் செயலாளர் ஹஸ்ரத் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “எந்தவொரு மதத்தினரையும் அவதூறாகப் பேசுவதும், மதத்தை அவதூறாக விமர்சிப்பதும் மிகப்பெரிய குற்றம். 

முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிக்கு எதிராகப் பேசிய இழிவான வார்த்தைகள் மிகவும் வேதனையளிக்கின்றன. முஸ்லீம் சமூகத்திற்காக, இந்த குற்றத்திற்கு எதிராக அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, நமது காயங்களில் உப்பைத் தடவுவதைத் தவிர வேறில்லை. மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

ஆனால் அதற்காக பதிலுக்கு கொலை செய்வதை சட்டமோ, இஸ்லாமிய ஷரியாவோ அனுமதிக்கவில்லை. உதய்பூரில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது." என்றார்.

நாட்டின் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் பொறுமையாக செயல்படுமாறும் முஸ்லிம் சமூகத்திற்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"இந்த விவகாரத்தில், வாரியம் முஸ்லிம் சமூகத்தை பொறுமையாக இருக்கவும், சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே நாட வேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது மட்டுமல்லாமல், இந்த பிரச்சினை முஸ்லிம்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமானது, எனவே அரசாங்கம் எந்த மதமாக இருந்தாலும் மத துவேஷத்தில் ஈடுபடுவதற்கு எதிரான ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது." என்று முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மேலும் தெரிவித்துளளது.

முன்னதாக ஜமியத் உலமா-இ-ஹிந்த் நேற்று உதய்பூர் கொலை சம்பவத்தை கண்டித்தது மற்றும் இது இஸ்லாம் மற்றும் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

உதய்பூரில் இணைய சேவை முடக்கம்:

சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்த நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. உதய்பூர் கோட்ட ஆணையர் ராஜேந்திர பட் அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு அவர்கள் சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு ஆதாரங்களின்படி, என்ஐஏ குழு குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்