Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்டோபர் 2.. யாருக்கும் அனுமதியில்லை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Sekar September 29, 2022 & 12:08 [IST]
அக்டோபர் 2.. யாருக்கும் அனுமதியில்லை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!Representative Image.

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி அனைத்து விதமான பேரணிகளுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க உத்தரவிட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் அதே நாளில் விசிக சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் திருமவளவன் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதியை மறுக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு பிஎப்ஐ அமைப்புக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கையால் ஏற்கனவே தமிழகத்தில் பதற்றமான நிலை நிலவுவதால், இந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தருவது மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு கருதுகிறது. மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடக்கும் அதே நாளில், வேறு சில அமைப்புகளும் ஊர்வலத்திற்கு அனுமதி கோரியுள்ளனர். 

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க, காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதால், ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது எந்தவொரு அமைப்புகளுக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்