Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

America School Gun Shot: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு...1 அல்ல 2 அல்ல இது 8வது முறை.. விவரங்கள் உள்ளே..!

madhankumar May 25, 2022 & 16:22 [IST]
America School Gun Shot: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு...1 அல்ல 2 அல்ல இது 8வது முறை.. விவரங்கள் உள்ளே..!Representative Image.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட பயங்கரமான துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது செயல்பட வேண்டிய நேரம். துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தை தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

8வது துப்பாக்கிசூடு:

அமெரிக்காவில் பள்ளிகளில் இதுவரை 8 முறை பயங்கர துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதில் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டாப்ஸ் மார்க்கெட்டில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 10 பேர் பலியாகியது அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பள்ளிகளில் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு விவரங்கள்:

கொலம்பைன் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிசூடு 1999:

கொலராடோவின் லிட்டில்டனில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்கள் தங்களுடன் பயின்ற 12 மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ரெட்லோக் உயர்நிலை பள்ளி துப்பாக்கிசூடு 2005:

16 வயது மாணவன் ஒருவன் தனது தாத்தாவையும் அவனது பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு, அருகில் இருந்த ரெட் லேக் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று 5 மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் ஒரு காவலாளி ஆகியோரை சுட்டுக்கொன்றான்.

வர்ஜீனியா டெக் பள்ளி ஏப்ரல் 2007:

வர்ஜீனியாவில் உள்ள வளாகத்தில் 23 வயது மாணவன் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இளைஞன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.

சாண்டி ஹூக் எலிமெண்டரி பள்ளி துப்பாக்கிசூடு, டிசம்பர் 2012:

நியூடவுனில் இருந்த ஒரு வீட்டில் வசிக்கும் 19வயது இளைஞன் தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டு அருகில் இருந்த சாண்டி ஹூக் எலிமெண்டரி பள்ளிக்கு சென்று அங்கு துப்பாக்கிசூடு நடத்தியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இளைஞன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தான்.

UMPQUA - சமூக பள்ளி துப்பாக்கிசூடு அக்டோபர் 2015:

ஓரிகானின் ரோஸ்பர்க்கில் உள்ள சமூகப்பள்ளியில் நபர் ஒருவர் நடித்த துப்பாக்கிசூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளி துப்பாக்கிசூடு, பிப்ரவரி 2018:

புளோரிடாவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 14 மாணவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 20 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சாண்டா ஃபே உயர்நிலைப்பள்ளி துப்பாக்கிசூடு, மே 2018:

ஹுன்ஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப்பள்ளியில் 17 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ராப் எலிமெண்டரி பள்ளி துப்பாக்கிசூடு, மே 2022:

டெக்சாஸில் உவால்டேயில் உள்ள தொடக்கப்பள்ளியில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்