Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகுலுக்கு எதிரான விசாரணையை திசை திருப்பவே போராட்டம் - அண்ணாமலை குற்றசாட்டு..!

madhankumar June 20, 2022 & 15:23 [IST]
ராகுலுக்கு எதிரான விசாரணையை திசை திருப்பவே போராட்டம் - அண்ணாமலை குற்றசாட்டு..!Representative Image.

பொள்ளாச்சியில் பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வசந்த்ராஜன் தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக அரசு மிகவும் மோசமான ஆட்சியை கொடுத்துவருகிறது. பாஜக 8 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். ஆனால் திமுகவில் ஒரு ஆண்டுகால ஆட்சியில் மக்கள் விரக்த்தியடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் கோட்டை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஒரு சரித்திர மாநாடாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த மாநாடு தீப்பொறியாக உள்ளது.

மேலும் பாஜக ஆட்சியில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல திட்டங்கள் தொடரப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

பா.ஜ.க. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தனர். மேலும் மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பொய் சொல்வது போன்றவற்றில் ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக உள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ராகுல் காந்தியின் ஊழல் வழக்கு விசாரணையை திசை திருப்பவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்த திட்டம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தி எதிர்காலங்களில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்