Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Alert புது வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தேவையா? - நிபுணர் பரபரப்பு கருத்து! 

KANIMOZHI Updated:
#Alert புது வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தேவையா? - நிபுணர் பரபரப்பு கருத்து! Representative Image.

இந்தியாவில் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸால்  பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், ஊரடங்கு தேவையில்லை என்றும்  தேசிய நுண்ணுறிவு இணைச் செயலாளர் முனைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். 

தற்பொழுது  சீனாவில் உருவெடுத்துவரும் PF4 வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் தற்பொழுது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நான்கு பேருக்கு இந்த தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

இது பற்றி தேசிய நுண்ணறிவு சங்கத்தின் இணை செயலாளரும், கூடலூர் அரசு கலைக் கல்லூரியின் துணை முதல்வர் சண்முகம் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில்  95 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 88 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

 குறிப்பாக சீனாவில் கடந்த வருடம் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டவர்கள் பட்டியலில் மிகவும் குறைந்து பின்தங்கி இருந்தனர். ஆனால் இந்தியாவில் ஊரடங்கை கைவிட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு  அனைத்து மக்களுக்கும் அதிகளவில் நோய் தடுப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. 

எனினும் கடந்த காலங்கள் போல கைகளை கழுவுதல், சானிடைசர் உபயோகப்படுத்துதல், முகக்கவசம் போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும் எனவும் ஏனென்றால் தனது குடும்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கு விரைவில் பரவும் ஆபத்து உள்ளது.

 எனவே அரசு கூறும் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் எனவும், குறிப்பாக இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் கூறினார்.

குறிப்பாக இந்த வைரஸ் மூலம் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மட்டும் மக்கள் இருந்தால்  போதும் எனத் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்