Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்; அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? 

KANIMOZHI Updated:
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்; அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? Representative Image.

புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புதுவகை கொரோனா பரவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா தீயாய் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட உள்ளன. 

1. கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

2. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஜனவரி 1ம் தேதி இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 

3. அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் உரிய தடுப்பு  நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. ஆனால், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடைமுறைகளின் (SOP) படி கட்டாயம் செயல்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

5. அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும் என 6 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்