Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
0.00sensex(0.00%)
நிஃப்டி22,336.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

நாளை முதல் இது கட்டாயம்; சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
நாளை முதல் இது கட்டாயம்; சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு! Representative Image.

கொரோனா தொற்று அதிமுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையும் புரட்டி போட்டு வரும் கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், சீனாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும் ஒமைக்ரானின் பிஎப்.7 என்ற புதிய வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்தியாவிலும் 3 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலே கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவிற்கு யாரும் பழியாகவில்லை என்றும், மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்