Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பதி சிறப்பு தரிசனம்; கொரோனா தடுப்பூசி சான்றிதழ் குறித்து அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
திருப்பதி சிறப்பு தரிசனம்; கொரோனா தடுப்பூசி சான்றிதழ் குறித்து அதிரடி அறிவிப்பு! Representative Image.

வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை என மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 30   நிமிடங்களில் 2. 20 லட்சம்   டிக்கெட்டுகளும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். 

இந்த டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தேவஸ்தான இணையத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும். அல்லது  தரிசனத்திற்கு வரும் 48 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். கோவிட் நிபந்தனைகள் கடைப்பிடிக்க வேண்டும் என நிபந்தனைகள் வைக்கப்பட்டிருந்தது. 

இது தவறுதலாக தேவஸ்தான இணையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா நிபந்தனைகள் குறித்து மத்திய, மாநில அரசு எந்தவித வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்திற்கு வரலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்