Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா? - அமைச்சர் மா.சு. செல்வது என்ன? 

KANIMOZHI Updated:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா? - அமைச்சர் மா.சு. செல்வது என்ன? Representative Image.

சென்னை சைதாப்பேட்டையில் மாண்டஸ் புயலால் உயிரிழந்த லட்சுமி என்பவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். 

நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணியின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது எனத் தெரிவித்த அமைச்சர், புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சுயகட்டுப்பாட்டுடன் மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். 

அதேசமயம் பிஎப்.7 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவும் தன்மை உடையது என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் விதிகளை சுயகட்டுப்பாட்டுடன் முறையாக பின்பற்ற வேண்டும்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்விடுத்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்