Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் 93 வயதில் நீண்ட கால காதலியுடன் திருமணம்..!!

Sekar Updated:
நிலவுக்கு சென்ற முதல் மனிதர் 93 வயதில் நீண்ட கால காதலியுடன் திருமணம்..!!Representative Image.

மனிதனின் முதல் நிலவு பயணத்தின் ஹீரோவான விண்வெளி வீரர் எட்வின் பஸ் ஆல்ட்ரின், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு தனியார் விழாவில் தனது நீண்டகால காதலை திருமணம் செய்து கொண்டதாக பேஸ்புக்கில் அறிவித்தார். 

ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து சந்திரனில் காலடி வைத்த முதல் நபர் என்ற வரலாறு படைத்தார். அவரது 93வது பிறந்தநாளான ஜனவரி 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.

“எனது நீண்டகால காதலும் துணைவருமான டாக்டர். அன்கா வி ஃபாரும் நானும் திருமணம் செய்து கொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய தனியார் விழாவில் நாங்கள் புனித திருமணத்தில் இணைந்தோம், மேலும் இளைஞர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம்" என்று ஆல்ட்ரின் பேஸ்புக்கில் எழுதினார்.

63 வயதான டாக்டர். அன்கா வி ஃபார், ஆல்ட்ரினின் நிறுவனத்தில் நிர்வாக துணைத் தலைவராக இரசாயனப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவர்.

வாழ்க்கையில் தாமதமாக திருமணம் செய்வது அரிது. ஆனால் பிரபலங்கள் மத்தியில் இது தொடர்ந்து நடைபெறுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 59வது வயதில் மெலனியா நாஸை மணந்தார். 

ஃபாக்ஸ் நியூஸ் சேனலை உருவாக்கியவரும் ஊடக அதிபருமான ரூபர்ட் முர்டோக் தனது 69வது வயதில் வெண்டி டெங் முர்டோக்கை மணந்தார். ஸ்டார் ட்ரெக்கில் கேப்டன் கிர்க்காக நடித்ததற்காக அறியப்பட்ட கனேடிய நடிகர் வில்லியம் ஷாட்னர் தனது 70வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் நடிகர் கபீர் பேடி தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருமணம் செய்து கொண்டார். 60 வயதில், சுஹாசினி முலே ஓய்வு பெற்ற இயற்பியலாளர் அதுல் குர்துவை மணந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்