Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாடி வளர்ந்திருந்தால் கல்யாணம் நிறுத்தப்படும்...வினோத முடிவு எடுத்த பொதுமக்கள்..!

madhankumar June 18, 2022 & 14:04 [IST]
தாடி வளர்ந்திருந்தால் கல்யாணம் நிறுத்தப்படும்...வினோத முடிவு எடுத்த பொதுமக்கள்..!Representative Image.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி என்ற மாவட்டத்தில் மொத்தம் 19 கிராமங்களைச் சேர்ந்த குமாவத் என்ற சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த கிராமத்தின் பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவு எடுத்துள்ளனர், அதாவது நாகரிகம் என்ற பெயரின் இளைஞர்கள் தாடி வளர்த்து கொள்கின்றனர் அது அவர்களது உரிமை, அதில் யாரும் தலையிட கூடாது. ஆனால் அவர்களின் திருமண நாள் அன்று தாடியை முற்றிலுமாக ஷேவ் செய்ய வேண்டும் அவ்வாறு பண்ணாமல் மன மேடைக்கு வந்தால் அவர்களது திருமணம் நிறுத்தப்படும் என்ற வினோத முடிவை எடுத்துள்ளனர்.

மேலும் திருமணத்தின் போது DJ டான்ஸ் போன்ற அனாவசியம் அற்ற செயல்களுக்கு தடை, விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவற்றை வாங்க கூடாது என குமாவத் சமூகத்தினருக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்வுகளின் போது இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளால் செலவு அதிகமாகும் என்பதால் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பாலியில் உள்ள குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அணைத்து ராஜஸ்தான் மக்களும் பின்பற்றினால் நன்றக இருக்கும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சமூகத்தை சேர்ந்த நபர்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் குடியிருந்தாலும் இந்த சடங்கை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

வினோதமாக இருந்தாலும் செலவை குறைக்கும் நோக்கிலும், கலாசாரத்தை காக்கும் வகையிலும் இந்த முடிவு உள்ளதால் அனைவரும் இதற்கு வரவேற்பளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்