சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று தொடங்கிய உணவு திருவிழா தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.
இந்நிலையில், இந்த திருவிழாவில் 150 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பலவகை உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுது. இந்நிலையில், இந்த திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பீப் பிரியாணி ஸ்டால் போட யாரும் அனுமதி கேட்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று முதல் உணவு திருவிழாவில் உள்ள சுக்குபாய் ஸ்டாலில் பீப் பிரியாணி இடம்பெறவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீப் பிரியாணி குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…