Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைதிக்கான நோபல் பரிசு.. போர் நடக்கும் உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டினருக்கு அறிவிப்பு!!

Sekar October 07, 2022 & 15:59 [IST]
அமைதிக்கான நோபல் பரிசு.. போர் நடக்கும் உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டினருக்கு அறிவிப்பு!!Representative Image.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, சிறையில் அடைக்கப்பட்ட பெலாரஸ் மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய குழு மெமோரியல் மற்றும் உக்ரேனிய சிவில் லிபர்டீஸ் அமைப்பு மையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. நோர்வே நோபல் கமிட்டியின் தலைவரான பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் இன்று ஒஸ்லோவில் வெற்றியாளரை அறிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நியாண்டர்டால் டிஎன்ஏவின் ரகசியங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு மருத்துவ விருது திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. சிறிய துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதைக் காட்டியதற்காக மூன்று விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான பரிசை வென்றுள்ளனர்.

அதிக இலக்கு மருந்துகளை வடிவமைக்கப் பயன்படும் மூலக்கூறுகளை இணைக்கும் வழிகளை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.

பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை நேற்று வென்றார். 

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்திற்கான 2022 நோபல் பரிசு அக்டோபர் 10, திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்படும். 

இந்த பரிசுகள் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (கிட்டத்தட்ட $900,000) ரொக்க விருதைக் கொண்டுள்ளன. மேலும் டிசம்பர் 10 அன்று விருது வழங்கும் விழா நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்