Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராஃபிக்கில் சிக்கிய கார்.. 3 கி.மீ நடந்தே சென்று ஆபரேஷன் செய்த டாக்டர்!!

Sekar September 12, 2022 & 13:24 [IST]
டிராஃபிக்கில் சிக்கிய கார்.. 3 கி.மீ நடந்தே சென்று ஆபரேஷன் செய்த டாக்டர்!!Representative Image.

போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கிய நிலைய நிலையில், டாக்டர் ஒருவர் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து ஒரு முக்கிய கவலையாக உள்ளது. இது அனைவரின் அன்றாட வேலைகளையும் மோசமாக பாதிக்கிறது. பெங்களூரின் சர்ஜாபூர் பகுதியில் உள்ள மணிப்பால் மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவிந்த் நந்தகுமாரும் இதற்கு தப்பவில்லை. 

ஆகஸ்ட் 30, 2022 அன்று காலை 10 மணிக்கு நடுத்தர வயதுப் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சையை அவர் செய்யத் திட்டமிடப்பட்டார். ஆனால் அவர் சர்ஜாபூர், மாரதல்லி பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

ஆனால் நோயாளியின் அறுவை சிகிச்சை மட்டுமே அவரது எண்ணமாக இருந்த நிலையில், சற்றும் யோசிக்காமல், காரை விட்டு இறங்கி மருத்துவமனைக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார். அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது, நோயாளி சரியான நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தற்போது வெளியே தெரிந்து வைரலாக மாறியுள்ள நிலையில் டாக்டர் கோவிந்த் நந்தகுமார், “நான் ஒவ்வொரு நாளும் மத்திய பெங்களூரிலிருந்து பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள சர்ஜாபூரின் மணிபால் மருத்துவமனைக்கு செல்கிறேன். அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். 

நான் மருத்துவமனைக்கு வந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய எனது குழு தயாராகி விட்டது. அதிக ட்ராஃபிக்கைப் பார்த்து, காரை டிரைவரிடம் விட்டுவிடுவது நடந்தே செல்வது என்று முடிவு செய்து, இருமுறை யோசிக்காமல் மருத்துவமனையை நோக்கி ஓடினேன்.” என்று கூறியுள்ளார்.

டாக்டர். கோவிந்த் நந்தகுமார், சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனைகளில் காஸ்ட்ரோஎன்டாலஜி ஆலோசகராக உள்ளார்.

அவர் அறுவை சிகிச்சை செய்த நோயாளி, குறிப்பிட்ட நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நன்றாக இருக்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்