Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆதாருடன் இணைச்சுட்டீங்களா..? - நாளையிலிருந்து ஃபான் கார்டு செல்லாது!

Saraswathi Updated:
ஆதாருடன் இணைச்சுட்டீங்களா..? - நாளையிலிருந்து ஃபான் கார்டு செல்லாது! Representative Image.

பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டுடன் ஃபான் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு ரூ.1000 அபராதத்துடன் வழங்கிய இறுதிக் காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. 

வருமானவரி செலுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆதார் கார்டுடன் ஃபான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் பல முறை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான இறுதிக்காலக்கெடு என ஜூன்.30.2023 என அறிவித்த மத்திய அரசு, ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறியிருந்தது.  

இதையடுத்து, ஏராளமானோர் அபராதத் தொகை செலுத்தி, தங்களது ஆதார் எண்ணுடன் ஃபான் கார்டை இணைத்துவந்தனர். இந்நிலையில், மத்திய அரசு வழங்கியிருந்த கடைசி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை ஆதார் -பான் இணைப்பை மேற்கொள்ளாத நபர்கள், இன்றுக்குள் அபராதத் தொகையான ரூ.1000-த்தை செலுத்தி இணைத்துக்கொள்ளலாம்.

இன்று இணைக்கத் தவறும் வாடிக்கையாளர்களின் பான் எண்  நாளை முதல் ரத்தாகிவிடும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதார்-ஃபான் இணைப்பை மேற்கொள்ளத் தவறியவர்கள் வருமானவரி செலுத்த முடியாது என்பதோடுடிடிஎஸ் பிடித்தம் மற்றும் டிடிஎஸ் செலுத்தும் விகிதம் அதிகரிக்கும். மேலும், வருமானவரித்துறை மூலம் வரும் நிலுவைத்தொகை மற்றும் வட்டி ஆகியவையும் ரத்துசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்