Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bengaluru Rain: பெங்களுருவில் வெளுத்து வாங்கிய கனமழை..இருவர் உயிரிழப்பு..!

madhankumar May 18, 2022 & 12:03 [IST]
Bengaluru Rain: பெங்களுருவில் வெளுத்து வாங்கிய கனமழை..இருவர் உயிரிழப்பு..!Representative Image.

தென்மேற்கு பருவமழை காரணமாக பெங்களுருவில் பெய்த கனமழை காரணமாக அங்கு சாலைகளில் வெள்ளைபேறுக்கு ஏற்பட்டுள்ளது, மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக உல்லல் உபநகர் பகுதியில் பணியாற்றி வந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவ்பாரத் மற்றொரு நபர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்கித் குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் சடலங்களும் பைப்லைன் போடும் பணி நடந்து கொண்டு இருந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை தொடங்கி இரவு முழுக்க பெய்த பலத்த மழை காரணமாக நகரில் 155 மில்லிமீட்டர் அளவில் பதிவானது என தகவல் வெளியாகி உள்ளது. மின்னல் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால், மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டன. பலத்த மழை காரணமாக பெங்களூரு நகரின் ஜெ.பி. நகர், ஜெயாநகர், லால்பாக், சிக்பெட், மஜெஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யெஷ்வந்த்புர், எம்.ஜி. ரோடு, கப்பன் பார்க், விஜயாநகர், ராஜராஜேஷ்வரி நகர், கெங்கேரி, மகடி ரோடு, மைசூரு ரோடு மற்றும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்