Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Assam Latest News : திடீர் வெள்ளப்பெருக்கு..? வெள்ளத்தில் கவிழ்ந்த ரயில்கள்..!

Muthu Kumar May 17, 2022 & 14:30 [IST]
Assam Latest News : திடீர் வெள்ளப்பெருக்கு..? வெள்ளத்தில் கவிழ்ந்த ரயில்கள்..!Representative Image.

Assam Latest News : அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்வதால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ரயிலே கவிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெள்ளம்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இதுவரை சுமார் 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

பாதிப்பு

இந்நிலையில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மீட்பு பணி

அசாம் மாநிலத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அசாமில் மழை வெள்ளத்தால் மூழ்கிய ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் அசாம் மக்களுக்காக தாங்கள் வேண்டிக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்