Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வருக்கு இரண்டாம் திருமணம்.. நாளை.. களைகட்டும் பஞ்சாப்!!

Sekar July 06, 2022 & 14:52 [IST]
முதல்வருக்கு இரண்டாம் திருமணம்.. நாளை.. களைகட்டும் பஞ்சாப்!!Representative Image.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. நாளை சண்டிகரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ இந்த திருமணம் நடக்க உள்ளது. பகவந்த் மான் டாக்டர் குர்ப்ரீத் கவுரை மணக்க உள்ளார். 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பகவந்த் மானின் திருமண விழாவில் கலந்து கொள்கிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

முன்னதாக பகவந்த் மான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இவரது முதல் மனைவி இந்தர்பிரீத் கவுர் மற்றும் இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

முதல் மனைவிக்கு பிறந்த அவரது இரண்டு குழந்தைகளும் தங்கள் தந்தையின் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்