Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுறவின் போது மாரடைப்பு....காதலன் பலி...போலீசார் விசாரணை..!

madhankumar July 06, 2022 & 11:12 [IST]
உடலுறவின் போது மாரடைப்பு....காதலன் பலி...போலீசார் விசாரணை..!Representative Image.

காதலர்கள் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காதலனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரை சேர்ந்த அஜய் பார்டெகி என்பவர் வெல்டிங் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வயது 28. இவரும் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செவிலியராக பணி புரிந்து வரும் பெண்ணும் (வயது 23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

இவரின் காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் எவ்வித பயமும் இல்லாமல் இருவரும் ஊர் சுற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இருவரும் லாட்ஜ் ஒன்றி அறையை வாடகைக்கு எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென பார்டெகி மயங்கி விழுந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த காதலில் லாட்ஜ் நிர்வாகிகளை அழைத்துள்ளார், அவர்கள் பார்டெகியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறும்போது இருவரும் நெருக்கமாக இருந்தபோது பார்டெகி மயங்கி விழுந்ததாக அந்த பெண் கூறினார். உயிரிழந்தவர் எந்த மருந்தையும் உட்கொண்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.. போதைப் பொருள் பொட்டலங்கள் என எந்த விதமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பெண் முன்னிலையிலும் அவர் எந்த மருந்தையும் சாப்பிடவில்லை என கூறினார்.

மேலும் பிரேதபரிசோதனை முடிவில் மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்ன தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர். இது குறித்து புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்சேதி கூறுகையில், உடல் உறவின் போது மாரடைப்பு வருவது அரிதானது. ஆனால் அதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கண்டறியப்படாத இருதய நோய்கள் 20 வயது இளைஞருக்கு கூட ஆபத்தாக மையலாம், 

இதனை கரோனரி தமனி என்று கூறுவார்கள். இந்த நோய்யின் தாக்கம் என்னவென்றால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை வழங்கும் இரத்தக் நாளங்கள் குறுகிய நிலையில் இருக்கும். கரோனரி தமனி என்கிற கண்டறியப்படாத இருதய நோய் இருந்தால், அவர்கள் உடலுறவு போன்ற செயலில் ஈடுபடும் போது அது உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம் என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்