Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

போபால் - நியூ டெல்லி வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Bhopal - New Delhi Vande Bharat Train

Priyanka Hochumin Updated:
போபால் - நியூ டெல்லி வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Bhopal - New Delhi Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wifi வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

ஏப்ரல் 1, 2023 அன்றிலிருந்து இந்தியாவின்  11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் இருந்து நியூ டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் வரை இயக்கப்படுகிறது. இந்த பதிவில் போபால் - நியூ டெல்லி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் சனிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி செல்லும் இந்த ரயில் ராணி கமலாபதி (ஹபீப்கஞ்ச்), விரங்கனா லட்சுமிபாய் ஜான்சி சந்திப்பு, குவாலியர் சந்திப்பு, ஆக்ரா கான்ட்., ஹஸ்ரத் நிஜாமுதீன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். போபால் - நியூ டெல்லி [702 கி.மீ தூரம்] மற்ற ரயில்களைக் காட்டிலும், வந்தே பாரத் வெறும் 7.30 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

போபால் - நியூ டெல்லி [எண்: 20171]

 

நியூ டெல்லி - போபால் [எண்: 20172]

ஏப்ரல் 1, 2023

சனிக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

702 கிமீ

7.30 மணி நேரம்

05.40 AM - 01.10 PM

 

02.40 PM – 10.10 PM

 

போபால் - நியூ டெல்லி வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்: 20171]: 

தினமும் காலை 5.40 மணிக்கு ராணி கமலாபதி (ஹபீப்கஞ்ச்) நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 08.46 மணிக்கு விரங்கனா லட்சுமிபாய் ஜான்சி சந்திப்பையும், காலை 09.48 மணிக்கு குவாலியர் சந்திப்பையும், காலை 11.23-க்கு ஆக்ரா கான்ட். நிலையத்தையும் சென்றடையும். பின்னர், காலை 11.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 01.10 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

போபால் - நியூ டெல்லி [எண்: 20171]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

ராணி கமலாபதி (ஹபீப்கஞ்ச்)

-

05.40 AM

விரங்கனா லட்சுமிபாய் ஜான்சி சந்திப்பு

08.46 AM

08.48 AM

குவாலியர் சந்திப்பு

09.48 AM

      09.50 AM

ஆக்ரா கான்ட்.

11.23 AM

11.25 AM

ஹஸ்ரத் நிஜாமுதீன்

01.10 AM

-

 

நியூ டெல்லி – போபால் வந்தே பாரத் ரயில் நேர அட்டவனை [எண்:20172]:

மறுமார்க்கமாக ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 02.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.10 மணிக்கு ராணி கமலாபதி (ஹபீப்கஞ்ச்) நிலையத்தை வந்தடையும்.

நியூ டெல்லி - போபால் [எண்: 20172]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

ஹஸ்ரத் நிஜாமுதீன்

-

02.40 PM

ஆக்ரா கான்ட்.

04.20 PM

04.22 PM

குவாலியர் சந்திப்பு

05.45 PM

05.47 PM

விரங்கனா லட்சுமிபாய் ஜான்சி சந்திப்பு

07.03 PM

07.05 PM

ராணி கமலாபதி (ஹபீப்கஞ்ச்)

10.10 PM

-


கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் போபால்  முதல் நியூ டெல்லி வரை செல்ல சேர் காரில் ரூ.1,735 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.3,185 வசூலிக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக, நியூ டெல்லி முதல் போபால் வரை செல்ல சேர் காரில் உணவுடன்  சேர்த்து ரூ.1,665 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவுடன்  சேர்த்து ரூ.3,120 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

போபால் - நியூ டெல்லி [எண்: 20171]

ரூ.1356

ரூ.2751

ரூ.1735

ரூ.3185

நியூ டெல்லி - போபால் [எண்: 20172]

ரூ.1357

ரூ.2751

ரூ.1665

ரூ.3120


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்