Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Mumbai Central To Gandhinagar Capital Vande Bharat Train

Gowthami Subramani Updated:
மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Mumbai Central To Gandhinagar Capital Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரல் முதல் காந்திநகர் தலைநகர் வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட முன்னதாகவே மும்பை சென்ட்ரல்-லிருந்து, காந்திநகர் தலைநகர் வரை சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற ஆறு நாள்களும் இயக்கப்படுகிறது. மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் போரிவலி, வாபி, சூரத், வதோதரா ஜங்ஷன், அகமதாபாத் ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் பயண நேரம் பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, 7 மணி நேரம் 36 நிமிடம் எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் இரயில் 6 மணி நேரம் 25 நிமிடங்களிலேயே சென்று விடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் [எண்: 20901]

 

 

காந்திநகர் தலைநகர் –

மும்பை சென்ட்ரல் [எண்: 20902]

செப்டம்பர் 30, 2022

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஆறு நாள்கள் இயங்கும்

522 கிமீ

6 மணி 25 நிமிடம்

06.00 AM – 12.25 PM

 

 

02.05 PM – 08.25 PM

 

மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் [எண்: 20901] வந்தே பாரத் நேர அட்டவணை:

20901 வந்தே பாரத் ரயில் ஆனது மும்பை சென்ட்ரல்-லிருந்து காலை 06.00 மணிக்குப் புறப்பட்டு, போரிவலிக்கு 06.23-க்கு வந்தடைகிறது. பின், 06.25 க்கு புறப்படும் இந்த ரயில் வாபிக்கு 07.56-க்கு வந்தடைந்து, அங்கிருந்து 07.58 மணிக்கு புறப்படுகிறது. அதன் பின், 08.55 மணிக்கு சூரத் வந்தடையும் இந்த இரயில் ஆனது 08.58 மணிக்கு மீண்டும் வதோதரா ஜங்ஷனுக்கு 10.13-க்கு வந்தடைகிறது. பின், இங்கிருந்து 10.16-க்குப் புறப்படும் வந்தே பாரத் இரயில் ஆனது அகமதாபாத் ஜங்ஷனுக்கு 11.25-க்கு வந்தடைகிறது. அதன் பிறகு, 11.30 மணிக்குப் புறப்படும் இந்த இரயில் ஆனது காந்திநகர் தலைநகருக்கு 12.25 மணிக்கு வந்தடைகிறது.

மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் [எண்: 20901]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

மும்பை சென்ட்ரல்

-

06.00

போரிவலி

06.23

06.25

வாபி

07.56

07.58

சூரத்

08.55

08.58

வதோதரா ஜங்ஷன்

10.13

10.16

அகமதாபாத் ஜங்ஷன்

11.25

11.30

காந்திநகர் தலைநகர்

12.25

-

 

காந்திநகர் தலைநகர் – மும்பை சென்ட்ரல் [எண்: 20902] வந்தே பாரத் நேர அட்டவணை:

20902 வந்தே பாரத் ரயில் ஆனது, காந்திநகர் தலைநகரிலிருந்து, மதியம் 02.05 மணிக்குப் புறப்பட்டு, அகமதாபாத் ஜங்ஷனுக்கு மதியம் 02.45 மணிக்கு வந்தடைகிறது. இந்த ஜங்ஷனில் இருந்து மதியம் 03.00 மணிக்கு புறப்பட்டு வதோதரா ஜங்ஷனுக்கு மதியம் 03.23 மணிக்கு வந்தடைகிறது. அதன் பின், மதியம் 03.56 மணிக்கு புறப்பட்டு சூரத்திற்கு மாலை 05.10 மணிக்கு வந்தடைந்து, மாலை 05.13 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை 06.13 மணிக்கு வாபிக்கு வந்தடைந்து, மாலை 06.15 மணிக்கு புறப்படுகிறது. மேலும், இரவு 07.32 மணிக்கு போரிவலிக்கு வந்தடைந்த இந்த வந்தே பாரத் ரயில் ஆனது, இரவு 07.34 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது. இறுதியாக இரவு 08.25 மணிக்கு மும்பை சென்ட்ரலுக்கு வந்தடைகிறது.

காந்திநகர் தலைநகர் –

மும்பை சென்ட்ரல் [எண்: 20902]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

காந்திநகர் தலைநகர்

-

14.05

அகமதாபாத் ஜங்ஷன்

14.45

15.00

வதோதரா ஜங்ஷன்

15.23

15.56

சூரத்

17.10

17.13

வாபி

18.13

18.15

போரிவலி

19.32

19.34

மும்பை சென்ட்ரல்

20.25

-

 

கட்டணம்

இந்த வந்தே பாரத் இரயிலுக்கான கட்டணம் ஆனது பயண வகுப்பைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, மும்பை சென்ட்ரல் முதல் காந்திநகர் தலைநகர் [எண்: 20901] வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலின் எக்ஸ்கியூட்டிவ் வகுப்புக்கான கட்டணம் மற்றும் சேர் கார் கட்டணம் முறையே ரூ.2.630 மற்றும் ரூ.1,420 ஆகும். அதே போல, காந்திநகர் தலைநகர் முதல் மும்பை சென்ட்ரல் வரையிலான வந்தே பாரத் இரயிலுக்கான எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம் மற்றும் சேர் கார் கட்டணம் முறையே ரூ.2,415 மற்றும் ரூ.1,320 வசூலிக்கப்படுகிறது.

வந்தே பாரத் இரயில்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

மும்பை சென்ட்ரல் – காந்திநகர் தலைநகர் [எண்: 20901]

ரூ.1,420

ரூ.2,630

காந்திநகர் தலைநகர் –

மும்பை சென்ட்ரல் [எண்: 20902]

ரூ.1,320

ரூ.2,415

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்