Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிர்க்கட்சி மாயையை உருவாகும் பாஜக....ஜெயக்குமார் குற்றசாட்டு...!

madhankumar June 11, 2022 & 15:39 [IST]
எதிர்க்கட்சி மாயையை உருவாகும் பாஜக....ஜெயக்குமார் குற்றசாட்டு...!Representative Image.

தமிழகத்தில் தாங்கள்தான் எதிர்கட்சி என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அந்த கட்சினர் அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையிலே அதிமுக தான் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சியின் கடமையை அதிமுக எப்போதும் செய்துகொண்டே இருக்கும் என கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பற்காக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்தனர். 

பின்னர் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில் ஓராண்டுகால ஆட்சியில் மக்கள் விரோத போக்கினை தோலுரித்து காட்டும் அளவில் அதிமுக - வின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும்  பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா  முகமது நபிகள் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு,  மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில்  மூக்கை நுழைக்க கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது என பதிலளித்தார்.

மேலும் ஆன்லைன் ரம்மிகு தடைவிதிக்க மாநில அரசிற்கு முழு அதிகாரம் இருந்தும் அதற்கு குழு அமைத்திருப்பது தேவையில்லாத ஒன்று எனவும். தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சி என்ற மாயையை பாஜகவினர் உருவாக்கி வருகின்றனர். உண்மையில் அதிமுக தான் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி. அதிமுக எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய கடமையை கண்டிப்பாக ஆற்றும் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்