Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதசார்பின்மை அஸ்திவாரத்தை சிதைக்க பாஜக முயற்சி-மெகபூபா முப்தி..!

madhankumar May 23, 2022 & 19:43 [IST]
மதசார்பின்மை அஸ்திவாரத்தை சிதைக்க பாஜக முயற்சி-மெகபூபா முப்தி..!Representative Image.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 'மதராசா'-க்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மெகபூபா, இந்தியாவை குஜராத் மாடல் ஆக்குவதா? அல்லது உத்தரபிரதேச மாடல் ஆக்குவதா? என போட்டி நிலவி வருகிறது. அந்த வரிசையில் இதையெல்லாம் விட அசாம் முதல்-மந்திரி முன்னிலையில் உள்ளார். இஸ்லாமியர் என நினைத்து இந்து மதத்தை சேர்ந்தவர் மத்தியபிரதேசத்தில் அடித்துக்கொல்லப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள். நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பது பற்றி அவர்கள் (பாஜக) பேசுகின்றனர். நாடு உருவான மதச்சார்பின்மை, நாட்டை இயக்கும் அரசியலமைப்பை பாஜக அசைக்கிறது. அரசியலமைப்பை பாஜக சிதைக்கிறது.

இஸ்லாமிய மதத்தினர் தூண்டப்படுவார்கள் என்பதற்காக கோவில் - மசூதி போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை பாஜக தலைவர்கள் எழுப்புகின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய மதத்தினர் எதிர்வினையாற்றும்போது அதை வாய்ப்பாக பயன்படுத்தி குஜராத், உத்தரபிரதேசத்தில் நடந்ததைபோல இஸ்லாமிய மதத்தினரை இனப்படுகொலை செய்ய பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர்' என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்