Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குண்டு ஒன்னு வச்சிருக்கேன்..! புரளி கிளப்பிய 'பீர்'முகமது 7வது முறையாக கைது..!!

Saraswathi Updated:
குண்டு ஒன்னு வச்சிருக்கேன்..! புரளி கிளப்பிய 'பீர்'முகமது 7வது முறையாக கைது..!!Representative Image.

சிறுமியின் உடலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்த நபரை கோவையில் குனியமுத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு குழந்தையின் உடலில், தான் வெடிகுண்டை பொருத்தி உள்ளதாகவும்,  சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். 

அதில்,  அந்த நபர், கோவையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்  கோவைப்புதூர் அருகே உள்ள சுகுணாபுரம் செந்தமிழ்நகரை சேர்ந்த பீர் முகமது (வயது44) என்பது தெரியவந்தது. 

குடிபோதையில் அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை  விடுத்துள்ளார். இதையடுத்து, பீர்முகமதுவை போலீசார் கைது செய்தனர். இந்த குடிமகன் பீர் முகமது, கடந்த 2018ல் குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புரளியை கிளப்பியதாக அடுத்தடுத்து இரண்டு முறை கைது செய்யப்பட்டார். 

அதுமட்டுமின்றி, 2020ல் ரேஸ்கோர்ஸ் போலீசார் இதேபோன்ற புரளி வழக்கில் கைது செய்த நிலையில், 2021ம் ஆண்டு மெரினா கடற்கரையில் வெடி குண்டு வைத்திருப்பதாக மிரட்டியதற்காக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், கடந்த ஆண்டும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைதான பீரமுகமது, தற்போது 7வது முறையாக மீண்டும் வெடிகுண்டு புரளி கிளப்பியதற்காக கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்