Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்...எம்பி பதவி ராஜினாமா...இது தான் காரணமா? | Boris Johnson Resigns

Priyanka Hochumin Updated:
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்...எம்பி பதவி ராஜினாமா...இது தான் காரணமா? | Boris Johnson ResignsRepresentative Image.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். இதனால் அவரின் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம். 

ஜான்சன் அதிகாரத்தில் இருந்த போது ஹவுஸ் ஆஃப் காமன்ஸை தவறாக வழிநடத்தினாரா என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாராளுமன்றம் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து தான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஜான்சன் போராடினார். ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக உலகிற்கு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜான்சன் கூறியது, சிறப்புரிமைக் குழுவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதற்கு பின்பு எனக்கு தெரிய வந்தது அவர்கள் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருந்தனர்.

நான் என்ன ஆதாரத்தை சமர்ப்பித்தால் இறுதியில் இது தான் முடிவு என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது. மேலும் 2001 ஆம் ஆண்டில் இருந்து நான் எம்பி-யாக பணியாற்றினேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. என்னோட கடமையை நான் சரியாக முழு மனதாக நிறைவேற்றினேன். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆகையால் நானே என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்