Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிகரெட் பழக்கத்தை குறைக்க கனடா அரசின் நூதன முயற்சி...!

madhankumar June 17, 2022 & 15:51 [IST]
சிகரெட் பழக்கத்தை குறைக்க கனடா அரசின் நூதன முயற்சி...!Representative Image.

மக்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் புகை பழக்கத்தை குறைக்கும் வகையில் நூதன முயற்சியில் கனடா நாடானது இறங்கியுள்ளது.

புகை பிடிப்பது, புகையிலை பழக்கங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற விளம்பரத்தை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஏன் சிகரெட் அட்டைகள் மற்றும் புகையிலை பொருட்களின் பேக்கிங் தாளில் கூட அவை இடம் பெற்றிருக்கும். ஆனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதற்கு எதிராக புகைஇலை போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக கனடா அரசாங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவெனில் இனி சிகரெட் போன்ற போதை பொருட்களின் வெளி அட்டைகளில் மட்டுமில்லாமல், சிகரெட்டுகளிலும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து வாசகங்கள் அச்சிடப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து அரசாங்கம் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, செயல்படத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய லேபிளிங்கை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் நாடாக கனடா இருக்கும்.

ஹெல்த் கனடாவின் வெளியீட்டின்படி, புதிய பேக்கேஜிங்கிற்கான யோசனையின் பின்னணியில் உள்ள புகைபிடிக்கும் இளைஞர்கள் சிறுவர்கள் நடுத்தர வயதினர் என அனைவரின் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 48,000 பேர் இந்த புகைப்பழக்கத்தால் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் அவற்றில் பலர் இறந்தும் விடுகின்றனர். எனவே அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களின் டைப்பிங் தாளிலேயே இந்த விளம்பரத்தை அச்சிட உளோம் என தெரிவித்துள்ளனர்.

“கனடாவின் இந்தப் புதிய உத்தியின் மூலம் 2035 ஆம் ஆண்டில் புகையிலை பயன்பாட்டை 13% இலிருந்து 5% க்கும் குறைவாகக் குறைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.என கனடா சுகாதாரத்துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்