Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்ரீமதி வழக்கு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை...சிபிசிஐடி..!

madhankumar August 06, 2022 & 10:00 [IST]
ஸ்ரீமதி வழக்கு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை...சிபிசிஐடி..!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மனைவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை அடுத்து  கலவரத்தில் பள்ளி முழுவது சூறையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் களமிறக்கப்பட்டு அங்கு நீடித்து வந்த பதட்டமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர் மேலும் அந்தக் கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்களை போலீசார் கைது செய்து தற்போது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் நியமன முறையில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் இந்த புலன் விசாரணையை நீதிமன்றம் கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தங்களது சொந்த கருத்தை பரப்பி வருகின்றனர். இது குற்றப்புலனாய்வு விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளது என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு பதிவையும் காணொளியையும் யாரும் பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நியாயமான நீதியை நிலைநாட்டுவதற்கு புலன்விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்குமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தனையும் மீறிச்செய்தல் அவர்களாவது யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் எனவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரின் அலைப்பேசி எண் 9003848126 க்கு நேரடியாக பகிரும்படி கேட்டு கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்