Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய பாதுகாப்புத்துறையில் லஞ்சம்.. ஐடிஏஎஸ் அதிகாரியை கைது செய்தது சிபிஐ!!

Sekar Updated:
இந்திய பாதுகாப்புத்துறையில் லஞ்சம்.. ஐடிஏஎஸ் அதிகாரியை கைது செய்தது சிபிஐ!!Representative Image.

லஞ்ச வழக்கில் இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை (ஐடிஏஎஸ்) அதிகாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 10 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டார். 

ஒருங்கிணைந்த நிதி ஆலோசகராக (IFA) ஜெய்ப்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கட்டளை 1998-பேட்ச் ஐடிஏஎஸ் அதிகாரி உமா ஷங்கர் பிரசாத் குஷ்வாஹா மற்றும் ஐஎஃப்ஏ அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட கணக்கு அதிகாரி ராம் ரூப் மீனா, விஜய் நாமா ஆகியோரை சிபிஐ கைது செய்தது. 

இந்த விவகாரத்தில் ஒரு இளைய மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட தனுஸ்ரீ சர்வீசஸின் இடைத்தரகர் ராஜேந்திர சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிந்த்யை மையமாக கொண்ட ஹைடெக் செக்யூரிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் குமார், கங்காநகரைச் சேர்ந்த இஎஸ்எஸ் பிஇஇ டிரேடர்ஸின் பிரப்ஜிந்தர் சிங் ப்ரார் மற்றும் பதிண்டாவைச் சேர்ந்த டி கே எண்டர்பிரைசஸைச் சேர்ந்த தினேஷ் குமார் ஜிண்டால் ஆகிய மூன்று நபர்களும் லஞ்சக் குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளது.

மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் தங்கள் பில்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் அனுமதி பெற ஐஎப்ஏ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சதி செய்ததாக கூறப்படுகிறது. குஷ்வாஹா, மீனா, நாமா மற்றும் சிங் ஆகியோருடன் இணைந்து, குற்றம் சாட்டப்பட்ட தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள். ஜெய்ப்பூர், ஜிந்த், பதிண்டா மற்றும் கங்காநகர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 40 லட்சம் ரூபாய், அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் குற்றவியல் ஆவணங்கள் மீட்கப்பட்டன என சிபிஐ தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்