Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மோடி ஆவணப்படம் மீது வழக்கில் பிபிசிக்கு நோட்டீஸ்..! | BBC Latest News about Modi Defamation Suit

Gowthami Subramani Updated:
மோடி ஆவணப்படம் மீது வழக்கில் பிபிசிக்கு நோட்டீஸ்..! | BBC Latest News about Modi Defamation SuitRepresentative Image.

பிரதமர் நரேந்திர மோடி ஆவணப்படம் மீது அவதூறு வழக்கு. டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசி சேனலுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது குறித்த விவரங்களைக் காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் நடந்துள்ளது. இந்த வன்முறையில் முஸ்லீம்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். மேலும் வன்முறையின் போது பதுங்கியவர்களும் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். மேலும் தீக்கிரையாக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததில் மோடி மீது எந்த வித குற்றமும் இல்லை என விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி அண்மையில் வெளியிட்டது. இந்த ஆவணப் படமானது பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டுவதாக இருந்ததால், இது மிகப்பெரிய சர்ச்சையானது. இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மாநிலங்களில் வெளியிட்டனர். ஆனால், சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடுத்தது பெரும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும், அவதூறு பரப்பிவிட்டதாகவும் பிபிசி நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசார்த்து, டெல்லி உயர்நெதிமன்றம் பிபிசி நிறுவனத்து சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்