Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ராணுவ அதிகாரிகள்.. கைது செய்த சிபிஐ!!

Sekar August 21, 2022 & 16:38 [IST]
லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ராணுவ அதிகாரிகள்.. கைது செய்த சிபிஐ!!Representative Image.

22.48 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், ராணுவ பொறியாளர் சேவைகள் (எம்இஎஸ்) பிரிவைச் சேர்ந்த மூத்த பாராக் அதிகாரி (லெப்டினன்ட் கர்னல்), சுபேதார் மேஜர் மற்றும் இரண்டு ஒப்பந்ததாரர்களை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ கைது செய்துள்ளது.

லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாலா கண்டோன்மென்டின் பெரும்பாலான டெண்டர்கள் அல்லது ஆர்டர்களை வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து சிபிஐக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச பரிவர்த்தனையின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என இரு தரப்பையும் சிபிஐ பொறிவைத்து பிடித்தது.

சோதனையின் போது, ​​லெப்டினன்ட் கர்னல் வளாகத்தில் இருந்து தோராயமாக ரூ.32.50 லட்சம் ரொக்கம் மற்றும் குற்றச்சாட்டுக்கு தொடர்புடைய ஆவணங்கள் மீட்கப்பட்டன. மேலும் அந்த தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் (தோராயமாக) மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர்:-

1. ராகுல் பவார், மூத்த பாராக்ஸ் ஸ்டோர் அதிகாரி (லெப்டினன்ட் கர்னல்), எம்இஎஸ், அம்பாலா கண்டோன்மெண்ட்.

2. பர்தீப் குமார் (சுபேதார் மேஜர்), அம்பாலா கண்டோன்மெண்ட்.

3. தினேஷ் குமார் மற்றும் பிரித்பால், தனியார் நபர்கள் (ஒப்பந்ததாரர்கள்).


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்