Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விமானத்தில் புகைபிடித்த பிரபலம்... அமைச்சர் அதிரடி..!

Muthu Kumar August 12, 2022 & 19:20 [IST]
விமானத்தில் புகைபிடித்த பிரபலம்... அமைச்சர் அதிரடி..!Representative Image.

சமூக வலைதள பிரபலம் பாபி கிட்டாரியா தனது சமூகவலைதள பக்கங்களை சுமார் 6.30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், பாபி கிட்டாரியா ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார்  விமானத்தின் இருக்கையில் படுத்தபடி சிகரெட் புகைக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. 

இதனையடுத்து, பாபி கிட்டாரியாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா, “விமானத்திற்குள் விதிகளை மீறிப் புகைப்பிடித்த சம்பவம் பற்றி விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், விமானத்தில் புகைப்பிடித்த பாபிகட்டாரியா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்