Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மானிய விலை தக்காளியின் விலையை குறைத்த மத்திய அரசு

Baskaran Updated:
மானிய விலை தக்காளியின் விலையை குறைத்த மத்திய அரசு  Representative Image.

டெல்லி: நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மானிய விலை தக்காளியின் விலையை மத்திய அரசு, 10 ரூபாய் குறைத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போதிய விளைச்சல், வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. கிலோ ஒன்று 250 ரூபாய் வரை விற்கப்பட்டது. பாமர மக்கள் முதல் அனைவரும் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்கவும் கோரிக்கை எழுந்து வருகிறது.  இந்த திடீர் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக 1 கிலோ தக்காளியை, 90 ரூபாய்க்கு விற்றது.

இதையடுத்து, சந்தையில் தக்காளி விற்பனை விலை சற்று குறைந்துஉள்ளது. கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக விற்கப்படும் தக்காளியின் விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் குறைத்து, 80 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கூட்டுறவு அமைப்புகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவை வாயிலாக இந்த விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை நேற்று வெளியிட்ட செய்தியில், 'தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை, 117 ரூபாயாக குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் குறையும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று கிலோ ஒன்று ரூ.132க்கு விற்கப்பட்டன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்