Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லஞ்சம் வாங்கிக்கொண்டு கிரயம் செய்த சார்பதிவாளர் - நியாயம் கேட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் போராட்டம்

Selvarani Updated:
லஞ்சம் வாங்கிக்கொண்டு கிரயம் செய்த சார்பதிவாளர் - நியாயம் கேட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண்  போராட்டம்Representative Image.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீட்டை, சார் பதிவாளருக்கு லஞ்சம் கொடுத்து பத்திரவு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் சார்பதிவாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியகாந்தி. இவரது அப்பா வேலு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் சூரியகாந்தி சின்ன மாமனார் முனுசாமியிடம் 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனால் அதே பகுதியில் உள்ள முனுசாமிக்கு சொந்தமான வீட்டுமனையை வைத்துக்கொள். உனக்கு எழுதி கொடுக்குறேன் என கூறியுள்ளனர். இதனால் வேலு மகள் சூரியகாந்தி அப்பா வாங்கிய வீட்டுமனையில் அரசால் வழங்கும் தொகுப்பு வீடு கட்டிக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். தரை வரி, வீட்டு வரி உள்ளிட்டவை கட்டி வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இரு தரப்புக்கு இடையே நில பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் முனுசாமி நான் ஏன் ஏற்கனவே விற்ற வீட்டு மனையை கொடுக்க வேண்டும். விற்ற வீட்டுமனையை என் மகன் தாமோதரனுக்கே எழுதி கொடுக்கிறேன் என கடந்த 5 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் சார் பதிவாளருக்கு ஒரு கணிசமான தொகை கொடுத்து கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ததாக தெரிகிறது. பத்திர பதிவு செய்யும் முன் சார் பதிவாளர் கிரயம் செய்யும் இடத்தை நேரில் பார்த்த போது தான் அந்த இடத்தில் குடியிருந்த சூரியகாந்திக்கு தகவல் தெரிய வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகாந்தி அவரது கணவர் செல்வமணி இருவரும் இன்று கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் முறையிட்டு நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த வீட்டை என் அனுபவத்தில் இருக்கும்போது எனக்கு தெரியாமல் எப்படி பத்திர பதிவு செய்யலாம் என அழுது சார் பதிவாளரிடம் அழுது கெஞ்சினார். இதுகுறித்து கலவை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட சூரியகாந்தி மற்றும் அவரது கணவர் செல்வமணியை காவல் நிலையம் அழைத்தனர்.

ஆனாலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் நான் இங்கேயே தீக்குளிப்பேன் என சூரியகாந்தி தெரிவித்தார். அதன் பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சூரியகாந்தி மற்றும் அவரது கணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் நேரில் சென்று முறையாக அக்கம் பக்கத்தில் நிலம் யாருக்கு சொந்தமானது? யார் இங்கு வசித்து வருகின்ற என விசாரிக்க வேண்டும். பல இடங்களில் இது போன்று விசாரிக்காமல் கையூட்டு பெற்று முறையற்ற முறையில் இதுபோன்று பத்திரம் பதிவு செய்வதால்  மோதல் ஏற்பட்டு கொலை, குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. பத்திரப்பதிவு சம்பந்தமாக மாவட்ட சார்பதிவாளர் அலுவலர் முறையாக விசாரணை செய்து ரத்து செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீர் மல்க தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்