Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம்...இலக்கை மாற்றியமைக்க முடிவு..!

madhankumar May 19, 2022 & 06:30 [IST]
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம்...இலக்கை மாற்றியமைக்க முடிவு..!Representative Image.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய திருத்தமாக, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை 2030-ம் ஆண்டுக்குள் கலக்க நிர்ணயித்து இருந்த இலக்கை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை 2025 -26 ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பெ ட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வகைகளில் உயிரி எரிபொருட்களை ஏற்றுமதி செய்யவும் அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நமது நாட்டில் உயிரி எரிபொருளுக்கான தேசிய கொள்கை 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்போது இந்த கொள்கையில் கொண்டு வரவுள்ள திருத்தங்களால் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் அன்னிய இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறையும் றன தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் சீர்திருத்தம் பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவுகளை , துணை நிறுவனங்களை மூடவும், பங்குகளை விற்கவும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அந்தந்த நிறுவனங்களின் இயக்குனர் குழுகளுக்கு வழங்குவது எனவும் மத்திய மந்திரிசபை கூட்த்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் செய்வதை அடிப்படையாகக் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் வீணான செயல்பாடுகளை , நிதி செலவினங்களை தடுக்க விரைந்து முடிவு எடுக்க இது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை