Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆளுநர் திடீர் ராஜினாமா..? முதல்வருடனான மோதல் தான் காரணமா?

Sekar May 18, 2022 & 18:18 [IST]
ஆளுநர் திடீர் ராஜினாமா..? முதல்வருடனான மோதல் தான் காரணமா?Representative Image.

டெல்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வரும் அனில் பைஜால், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் குடிமைப் பணி அதிகாரியான அனில் பைஜால், முன்பு டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்து வந்த நஜீப் ஜங் 2016இல் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2016 டிசம்பரில் டெல்லியின் லெப்டினன்ட் கவர்னராக பொறுப்பேற்றார்.

முழுமையான மாநில அந்தஸ்து இல்லாமல், அதே வேளையில் சட்டபையையும் கொண்டிருப்பதால், டெல்லியில் ஆம் ஆத்மி பதவியேற்ற பிறகு லெப்டினன்ட் கவர்னர் பதவி முழு அதிகார மோதலின் மையமாக இருந்தது. 2018 இல் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் இந்த மோதல் குறைந்தது.

எனினும், அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு பைஜால் அவ்வப்போது தடை செய்வதோடும், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான கருத்துக்களால் பதிலடி கொடுப்பதன் மூலமும், இந்த மோதல் தொடர்ந்தே வருகிறது.

இந்நிலையில் தற்போது அனில் பைஜால் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனாலும் தற்போதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்