Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாஸ் காட்டிய மத்திய அரசு.. பெட்ரோல் டீசல் விலை தடாலடி குறைப்பு!!

Sekar May 21, 2022 & 19:33 [IST]
மாஸ் காட்டிய மத்திய அரசு.. பெட்ரோல் டீசல் விலை தடாலடி குறைப்பு!!Representative Image.

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ₹ 1 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

எனினும் மக்களின் நலனை பிரதானமாகக் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ள மத்திய அரசு, இதேபோன்ற வரிக்குறைப்பை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் "அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாக கடந்த சுற்றில் (நவம்பர் 2021) வரி குறைக்காத மாநிலங்களையும் இதேபோன்ற வரிக்குறைப்பைச் செயல்படுத்தி சாமானிய மக்களுக்கு வழங்குமாறு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த தீபாவளி குறைப்புக்குப் பிறகு 3 மாதங்களுக்கும் மேலாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், பின்னர் 14 முறை மாற்றப்பட்டது. எனினும் தற்போது தொடர்ச்சியாக 40 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

மே 21 இன்றைய நிலவரப்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 105.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் இருந்தது. மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ.120.51 மற்றும் ரூ.104.77 ஆக உள்ளது. அதே போல் சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் இன்று விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்பில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் ஒன்பது கோடி பயனாளிகளுக்கு ஒரு எரிவாயு சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியம் வழங்க மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்து விளிம்பு நிலை மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை