Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் இனிமேல் இது கட்டாயம்.. மீறினால் அபராதம்!!

Sekar May 21, 2022 & 18:26 [IST]
சென்னையில் இனிமேல் இது கட்டாயம்.. மீறினால் அபராதம்!!Representative Image.

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பெருநகர போக்குவத்துக் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் நடத்தில் ஒரு ஆய்வில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களால் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் 80 பைக் ஓட்டியவர்கள் மற்றும் பின் சீட்டில் அமர்ந்து பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். 714 ஓட்டுநர்கள் மற்றும் 127 பின் சீட் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இதனால் விபத்துகளைக் கட்டுப்படுத்த வரும் திங்கட்கிழமை முதல் சென்னையில் பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாது பின் சீட்டில் பயணம் செய்யும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின் சீட் பயணிகள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்