Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chennai Latest News : மகாத்மா காந்தி சிலை இடமாற்றம்..? சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

Muthu Kumar May 20, 2022 & 15:15 [IST]
Chennai Latest News : மகாத்மா காந்தி சிலை இடமாற்றம்..? சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!Representative Image.

Chennai Latest News : சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

புதிய மெட்ரோ ரயில் பாதை 

சென்னை பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் நிறுத்தத்திற்கான நிலையம் காந்தி சிலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தி சிலை இடமாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும்போது மகாத்மா காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்ககும் விதமாக காத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ சான்றிதழ்

இந்நிலையில், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ சான்றிதழை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும் காந்தி சிலை மாற்றி வைப்பதற்காக இடம் கண்டறிய ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தகவல்

சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சாலையில் உள்ள இடத்தை கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மெட்ரோ பணிகள் முடிவுற்ற பின் பழைய இடத்திலேயே மீண்டும் சிலை வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்