Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதலமைச்சர் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து..!

madhankumar August 04, 2022 & 13:07 [IST]
முதலமைச்சர் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து..!Representative Image.

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஏராளமானோர் அவரது வீட்டில் குவிந்தனர். புதுச்சேரி நகர் முழுவதும் அவரின் பிறந்தநாளை, அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

பொன்னியின் செல்வன், விக்ரம், புஷ்பா, திரைப்படத்தில் வரும் ஹீரோக்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து முதல்வர் ரங்கசாமி முகத்தை வைத்து பேனர்கள் வைத்து அசத்தியுள்ளனர்.

பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்று வழிபட்ட முதலமைச்சர் ரங்கசாமி, அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். புதுச்சேரி மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்