Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

ஒரு மாதத்தில் கொரோனாவால் 60,000 பேர் மரணம்.. சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Sekar Updated:
ஒரு மாதத்தில் கொரோனாவால் 60,000 பேர் மரணம்.. சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!Representative Image.

சீனாவில் தொற்றுநோயின் நிலை குறித்த தரவுகளை அரசாங்கம் வெளியிடத் தவறியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் தொடக்கத்தில் இருந்து இன்று வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையில் கொரோனாவால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக 5,503 இறப்புகள் மற்றும் கொரோனாவுடன் இணைந்து மற்ற நோய்களால் 54,435 இறப்புகள் அடங்கும். 

அந்த மரணங்கள் மருத்துவமனைகளில் நிகழ்ந்ததாக தேசிய சுகாதார ஆணையம் கூறியது. இது தவிர இன்னும் அதிகமான மக்கள் வீட்டிலேயே இறந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரஸ் எதிர்ப்பு கட்டுப்பாடுகளை திடீரென நீக்கிய பிறகு, டிசம்பர் தொடக்கத்தில் கொரோனா நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் குறித்த தரவை வெளியிடுவதை சீன அரசாங்கம் நிறுத்தியது. 

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற அரசாங்கங்கள் நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் தகவல்களை வெளியிடுமாறு சீனாவை வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்