Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பயங்கவாதத்திற்கு எதிராக இரட்டை வேடம்.. ஐநாவில் அம்பலப்பட்ட சீனா!!

Sekar August 11, 2022 & 14:29 [IST]
பயங்கவாதத்திற்கு எதிராக இரட்டை வேடம்.. ஐநாவில் அம்பலப்பட்ட சீனா!!Representative Image.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது துணைத் தலைவரை உலகளாவிய பயங்கரவாதிகள் தடுப்புப்பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்துள்ளது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அதன் இரட்டைப் பேச்சு மற்றும் இரட்டைத் தரத்தை அம்பலப்படுத்துகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூப் அசாரை ஐநா கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைத்த தீர்மானத்தை நேற்று சீனா நிறுத்தியதாக தகவல் வெளியானது.

இது இந்திய தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் அரசியல் ரீதியான அணுகுமுறை காரணமாக பொருளாதாரத் தடைகள் குழு அதன் பங்கை வகிக்காமல் தடுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என இந்திய அரசு வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தன. 

ஐநா சபை கூட்டத்திலேயே இந்தியாவின் பிரதிநிதி இதை வெளிப்படையாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 1267 தடைக் குழுவில் பயங்கரவாதிகளை பட்டியலிடுவதை சீனா தடுப்பது இது முதல் முறையல்ல.

முன்னதாக ஜூன் 2022 இல், லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் அப்துல் ரெஹ்மான் மக்கியை பொருளாதாரத் தடைகள் பட்டியலில் பட்டியலிட இந்தியா மற்றும் அமெரிக்கா முன்வைத்த கூட்டுப் பரிந்துரையை சீனா நிறுத்தி வைத்தது.

மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட இந்தியாவில் வன்முறை மற்றும் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்காக நிதி திரட்டுதல், இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தீவிரமயமாக்குதல் ஆகியவற்றில் மக்கி ஈடுபட்டுள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"அரசியல் பரிசீலனைகள் காரணமாக பொருளாதாரத் தடைகள் குழு அதன் பங்கை வகிக்காமல் தடுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்