Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவை எதிரியா பார்க்கவேயில்லை.. ஜகா வாங்கும் சீனா.. பரபர பின்னணி!!

Sekar October 27, 2022 & 17:26 [IST]
இந்தியாவை எதிரியா பார்க்கவேயில்லை.. ஜகா வாங்கும் சீனா.. பரபர பின்னணி!!Representative Image.

இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாளராகவோ அல்லது எதிரியாகவோ சீனா ஒருபோதும் கருதியதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார்.

டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர் லி ஜிமிங், பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்றார்.

இந்தியாவுக்கான சீனத் தூதுவர் சன் வெய்டாங் சில நாட்களுக்கு முன்பு, இந்தியா-சீனா இரண்டும் புவிசார் அரசியல் பொறியிலிருந்து வெளியேறி கடந்த காலத்திலிருந்து வேறுபட்ட புதிய பாதையைக் கண்டறிய வேண்டும் என்று கூறிய சில தினங்களில் இதே கருத்து வங்கதேசத்துக்கான சீனத் தூதரிடம் இருந்தும் வந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜூலை 2019 இல் இந்திய தூதராக பதவியேற்ற சன், கடந்த செவ்வாயன்று தனது பிரியாவிடை உரையில், இரு தரப்பினருக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்ப்பதன் அவசியத்தையும், மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

முக்கியமான அண்டை நாடுகளான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் சில வேறுபாடுகள் இருப்பது இயற்கையானது தான் ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து நேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சீனத் தூதர் சன் சந்தித்தபோது, இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தனமையும் அவசியம் என்று வலியுறுத்தினார். 

இந்தியா-சீனா உறவுகள் என்பது, பிரதமர் மோடி வந்த பிறகு மிகவும் நெருக்கமாக சென்ற நிலையில், சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது தான் தற்போதைய ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் அடிப்படை காரணமாக இருக்கும் நிலையில், சீனா இந்தியாவை எதிரியாக பார்க்கவில்லை எனக் கூறி வருவது, சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்